Monday, September 22, 2008

கவிதை : அழகு

வானம் மறைக்கும் கருமேகம்
கருமேகத்தை கணிய வைக்கும் குளிர் காற்று
குளிர் காற்றால் வரும் சிறு தூறல்
சிறு தூறளால் நனைந்த வயல் வெளிகள்
அதன் வழியாக செல்லும் சிறு ரயில்
ரயில் நிற்கும் இடத்தில் ஒரு சிறு உணவகம்
அங்கே கொதிக்கும் ஏலத்தின் மனம்
அதனால் வரும் பசி...
இவை அனைத்தும் அழகாய் இருக்கும் அவள் அருகில் இருந்தால்....

Saturday, September 13, 2008

சில புகைப்படங்கள்


நான் பதிவு போட ஆரம்பித்ததை பத்தி யார் என் மேனேஜர் கிட்ட போட்டு கொடுத்தாங்கன்னு தெரியல, ஆபீஸ் ல ஆணி புடுங்கற வேலை ரொம்ப ஜாஸ்தி ஆயிடிச்சு, அதனால போன பதிவுல கமெண்ட் போட்ட யாருக்கும் நன்றி கூட சொல்லமுடியல, அதை இங்க சொல்லிக்கறேன்.
PIT போட்டிக்காக photo எடுத்த பிறகு இன்னிக்கு தான் காமெராவை கைல எடுக்கறேன். இதுல நிறைய போட்டோ இன்னிக்கு ஒரு உயிரியல் பூங்கா எடுத்தது, சில போட்டோ இங்க இருக்கற நண்பர் வீட்டில் எடுத்தது. பார்த்துட்டு எப்படி இருக்குன்னு கமெண்ட் பெட்டில திட்டிட்டு போங்க...எல்லார்க்கும் Happy WeekEnd !!!
IMG_2281


IMG_2280


IMG_2278


IMG_2252




IMG_2253


IMG_2265


IMG_2273


IMG_2274


IMG_2235


IMG_2282


IMG_2287


IMG_2292


IMG_2316


IMG_2224


IMG_2219

Wednesday, September 10, 2008

சமையல் கதைகள் - நண்பர்களுக்கு விருந்து

நான் காபி போட்ட கதையை தொடர்ந்து மேலும் சில சமையல் அனுபவங்கள் :)

அப்போ நான் ஜப்பானுக்கு வந்து 3 மாசம் முடிஞ்சிடுச்சு. நானும் கைல கால்ல சுட்டுகிட்டு (அது சரி சமைக்கும் போடு கைல சுடும் அது எப்படி கால்ல சுடும் , தெரிஞ்சவங்க கமெண்ட் ல சொல்லுங்க ) சமையல் கத்துகிட்டேன். அப்போ புதுசா வேற ஒரு வீட்டுக்கு மாறி இருந்தேன். அங்க ஏற்கனவே இருந்த என்னோட நண்பரும், அவர் மனைவியும் ரொம்ப ஹெல்ப் பண்ணினாங்க. அவங்களுக்கு ஒரு நாளைக்கு சாப்பாடு போடனும்னு எனக்கு வேண்டாத ஆசை ஒன்னு வந்துச்சு. அதுக்கு தூபம் போடற மாதிரி என் டீம் ல இருந்த பாலாவும், ஹர்ஷும் அவங்களும் வந்து எனக்கு சாப்பாடு செய்ய ஹெல்ப் பன்றேனு சொன்னாங்க.

'இத இத இததான் நானும் எதிர் பார்த்தேன்' அப்டின்னு சொல்லிட்டு, நாங்க 3 பேரும் என்ன செய்யலாம் னு டீப்பா திங்க் பண்ணி ஒரு முடிவுக்கு வந்தோம். அது படி
1. அருண் - சாம்பார், கோபி மசாலா
2. பாலா - உருளை கிழங்கு பொரியல், பாயசம்
3. ஹர்ஷ் - சப்பாத்தி, டால்
இப்டி முடிவாச்சு எங்க மெனு.

'The 'D' day has arrived' னு சொல்ற மாதிரி அந்த நாளும் வந்துச்சு.
பாலாவும், ஹர்ஷும் காலைல 9.30 க்கு வீட்டுக்கு வரேன்னு சொன்னாங்க...நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன் மணி 10, 10.30 இப்படியே ஓடுது, நானும் டாலுக்கு பருப்பு வேக வச்சி, பொரியலுக்கு உருளை கட் பண்ணி இப்டி எல்லாரோட வேலையும் பார்க்கிறேன்...ஆனா இவங்க வந்த பாட காணும்.
சரி பொருத்தது போதும் பொங்கி எழுவோம் னு சொல்லிடு ஒரு 11 மணிக்கு பாலாவுக்கு போன் பண்ணினா 'எ ழு ப் பி னத்துக்கு தேங்க்ஸ் அருண், சீக்கிரமா கிளம்பி வரேன்' னு சொல்லரா.

இப்டி அவங்க ரெண்டு பேரும் சீக்கிரமா வந்து சேரும் பொது மணி 12.30. 'Arun Can we have ready made chappathi instead of preparing now??' இது ஹர்ஷ். பாலா இந்த விஷயத்தில் விவரம் ஜாஸ்தி வரும் போதே கைல ரெடி டு ஈட் பாயசம் மிக்ஸ் எடுத்துட்டு வந்துட்டா. சரி இவங்க ரெண்டு பேரும் ஒரு குரூப் பா தான்யா கிளம்பி இருகாங்க னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு மீதி ஐடம் எல்லாத்தியும் நான் சமைச்சி முடிச்சேன்.

அதுக்குள்ள நண்பர் வீட்டுக்கு வந்துட்டார். சரி அவங்களுக்கு போர் அடிக்க கூடாதுன்னு லேப்டாப் ல தசாவதாரம் படாத போட்டுட்டு நான் சமைசிகிட்டு இருந்தேன். ஒரு வழியா நாங்க சமைச்சி முடிச்சு அவங்க சாப்பிடும் பொது படாத ஏற குறைய முழுசா பார்த்து முடிச்சிடாங்க.

இப்டி ஒரு வழியா அவங்க சாப்பிட்டு முடிக்கும் பொது மணி 4.30. சாப்பிட்டு முடிச்சிட்டு என் நண்பரும் அவர் மனைவியும் சொன்ன கமெண்ட்
'Arun can prepare 5 different dishes in same taste'

Saturday, September 6, 2008

என்னை வாழ வைத்த தெய்வங்கள்

நேற்று ஆசிரியர் தினம்...நேற்றே இந்த பதிவை இட வேண்டும் என எண்ணி இருந்தேன்.
ஆனா ஆபீஸ் ஆணி புடுங்கற வேலை ஜாஸ்தி ஆயிடிச்சு, நெருப்பு நறிய (Firefox a எல்லாரும் இப்டி தான் எழுதறாங்க) தொறக்க முடியாம போயிடிச்சு.

என்ன கட்டி மேய்த்த எல்லா ஆசிரியரும் தெய்வங்கள் தான், ஆனா அதுல ஒரு 3 பேர் மட்டும் ஸ்பெஷல் - அவங்களுக்காக அவங்கள பத்தின பதிவு இது.

Hema Miss : நான் வாழ்க்கையில் மறக்க முடியாத, மறக்க கூடாத ஒரு ஆத்மா. எனக்கு L.K.G முதல் டியூஷன் எடுத்தவங்க (நான் அவ்ளோ வாலு, என்ன வீட்ல வச்சி இருக்க முடியாம அப்பா L.K.G க்கே டியூஷன் அனுப்பிட்டாங்க). என்ன ஒரு ஸ்டுடென்ட் போல பார்காம ஒரு குழந்தை மாதிரி தான் ட்ரீட் பண்ணுவாங்க. இவங்க கிட்ட டியூஷன் போறது எதோ எனக்கு சொந்தகாரங்க வீட்டுக்கு போற மாதிரி இருக்கும், ஆனா டியூஷன் முடிச்சிட்டு வெளியல வரும் பொது தேவையானது எல்லாம் படிச்சிட்டு ஹோம் வொர்க் முடிச்சிட்டு வந்து இருப்பேன். 7 வருஷம் இவங்க கிட்ட டியூஷன் படிச்ச காலத்துல்ல எனக்கு வீட்டுக்கு வந்து படிக்க வேண்டிய கட்டாயமே கிடையாது. ஆனா இதுவே எனக்கு பின்னாடி ஒரு பிரச்சனையா போச்சு. வீட்டுக்கு வந்தா படிக்கவே மாட்டேன். இவங்களுக்கு திருமணம் ஆகி வெளியூர் போன பிறகு எனக்கு வேற நல்ல டியூஷன் டீச்சர் கிடைக்காம ரெண்டு வருஷம் ரொம்ப கஷ்ட பட்டேன். அப்புறம் வேற ஒரு ஸ்கூல் மாறின பிறகு தான் கொஞ்சம் மீண்டு வந்தேன்.
எல்லாருக்கும் தாய் தான் முதல் ஆசிரியர் னு சொல்ல்வங்க, எனக்கு முதல் ஆசிரியர் தாய் போல அமைந்தது என் பாக்கியம்.

ஒரு வழியா வேற ஸ்கூல் மாறி, திருப்பி கொஞ்சம் நல்ல படிக்க ஆரம்பிச்சேன். புது ஸ்கூல் ரொம்ப நல்ல இருந்துச்சு, எங்க அப்பா படிச்ச ஸ்கூலும் இது தான். அங்க இருந்த பாதி டீச்சர்ஸ் அப்பா கூட படிச்சவங்க இல்ல அப்பா க்கு கிளாஸ் எடுத்தவங்க அதனால அங்க நான் செல்ல பிள்ளை.

அங்க 11th படிக்கும் போது எனக்கு கணக்கு பாடம் எடுத்த ஜெயசீதா maam தான் என் இரண்டாவது தெய்வம். ஆசிரியர் வேலையை தொழிலாக செய்யாமல் ஒரு சேவையாக இன்றைக்கும் செய்து வருபவர். Integration and Differentiation இவங்கள மாதிரி சொல்லி தருவதற்கு ஆள் இல்ல. அதை தவிர இவங்க கிட்ட எனக்கு பிடிச்சது ஸ்டுடென்ட்ஸ் மேல இவங்க காட்டும் அக்கறை. எக்ஸாம் டைம் போது இவங்க வீட்லயே தங்கி படிக்கற ஸ்டுடென்ட்ஸ் கூட இருகாங்க. நான் இவரிடம் 11th and 12th Maths டியூஷன் போனேன், ஆனால் அவங்க இதுக்காக என்கிட்ட 1 ரூபாய் கூட பீஸ் வாங்கல. இதுக்கு அவங்க சொன்ன காரணம் - 'நீ Naturala 160 marks எடுக்க வேண்டிய பையன், உன்ன நான் 190+ எடுக்க வச்சா தானே நான் உனக்கு டியூஷன் சொல்லி கொடுத்தேன் னு அர்த்தம், +12 public exam 190+ marks எடு, நான் உங்க வீட்டு வாசல்ல ஈட்டி காரி மாதிரி வந்து பீஸ் வாங்கறேன்'.
இத அவங்க சொன்னது 11th exam முடிந்த பிறகு. ஆனா நான் +12 Maths எடுத்த marks 155.
அதனால marks வந்த பிறகு நான் அவங்கள போய் பார்க்க கூட இல்ல. ஒரு வழியா B.Sc முடிச்சிட்டு ஒரு நல்ல university la PG கிடைச்ச பிறகு தான் அவங்கள பார்க்க போனேன், அப்போ அவங்க 'நீ இந்த university ஸீட் வாங்கினது பத்தாது, You deserve more for your talent' னு ஊக்க படுத்தினாங்க. இதற்க்கு பிறகு ஒரு நல்ல வேலை கிடைத்த பிறகு அவங்களை போய் பார்த்தேன் அப்போ அவங்க சொன்ன வார்த்தை 'இப்போ தான் I am relived. Now you know how to utilize your talent. இத நீ உன் லைப் எல்லா இடத்திலும் அப்ளை பண்ணு You will be more successful' னு வாழ்த்தி அனுப்பினாங்க. ஆனா இன்னிக்கு வரைக்கும் அவங்களுக்கு அந்த 11th, 12th டியூஷன் பீஸ் கொடுக்கல, ஏன்னா அதை இனிமே பணமா கொடுப்பதில் அர்த்தம் இல்லைனு எனக்கு தெரியும்.

எல்லாருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

Friday, September 5, 2008

நாங்க காபி போட்ட கதை.

நண்பர் sri காபி போட்ட அனுபவங்களை பற்றி ஒரு பதிவு போட்டு இருகாங்க. அவங்க மாதிரி காபி போட முடியாதுனாலும் அதே மாதிரி ஒரு பதிவு போட முயற்சி பண்றேன் :)

இந்த சரித்திர புகழ் பெற்ற நிகழ்ச்சி நடந்தது என் நண்பன் விடுதலை (அவன் பேர் அதாங்க !!!) வீட்ல. விடுதலையும் , சௌந்தரும் படம் வரையர்த்துக்கு நான் தார்மிக அதரவு கொடுத்துகிட்டு இருந்தேன். அப்ப வெளில கிளம்பின விடுதலை அம்மா 'பசங்களா அடுப்புல பால் காச்சி மூடி வச்சி இருக்கேன் வேணும்கறப்ப காபி போட்டு சாபிடுங்கனு' சொல்லிட்டு போய்டாங்க.
அதுவரைக்கும் படம் வரையறதுல டீப் திங்கிங் ல இருந்த விடுதலை 'இருங்கடா நான் போய் உங்களுக்கு காபி போட்டு தரேன் னு கிளம்பினான்'. ஆனா அந்த 'உங்களுக்கு' னு அவன் சொன்னதுல இருந்த உள்குத்த அப்ப எங்களால புரிஞ்சிக்க முடியல.

இப்டி Kitchen குள்ள போனவன் ஒரு அரை மணி நேரம் கழிச்சி வந்து..
.'டேய் ஒரு சின்ன பிரச்சனை டா...காபி ஏன்னு தெரியல கரையவே மாட்டேங்குது'
'இரு நான் வரேன்'
kictchen குள்ள போனா, பிரவுன் கலர்ல ஒரு திரவம் அடுபுள்ள கொதிச்சிகிட்டு இருக்கு.
'டேய் அதன் காபி ரெடி ஆயிடிச்சுல்ல இதுல்ல என்ன டா பிரச்சனை' இது நான்.
'டேய் வெண்ணை, காபி போடி அதுலேயே இருக்கு கரைய மாட்டேங்குது'
'பூஸ்ட், ஹார்லிக்க்ஸ் தான் பால்ல கரையும். டீ, காபி கரையாது...நாம தான் வடிகட்டணும்...போய் filter எடுத்துக்கிட்டு வா'...

ஒரு வழியா அத வடிகட்டி நாங்க குடிச்சி முடிச்சோம்....இந்த காபி சூப்பர் னு வேற சொன்னான் சௌந்தர் !!!!.

பி.கு : நாங்க பால்ல கலந்தது ப்ரூ இல்ல பில்டர் காபி பொடி னு, இந்த சம்பவம் நடந்து 6 வருஷம் கழிச்சி இப்ப ஜப்பான் ல இருக்கும் போது தெரிஞ்சுகிட்டேன் :)

எல்லாருக்கும் Happy Weekend !!!!

Saturday, August 30, 2008

பொது நலத்திற்காக வாழ்தல்...

நண்பர் சர்வேசன் பொது நலத்திற்காக வாழ்ரத பத்தி ஒரு பத்தி ஒரு பதிவு போட்டு இருக்கார். அவர் பதிவ படிச்ச போதும் அத தவிர மத்த பொது சேவை நிகழ்ச்சி, செய்திகள் பார்க்கும் போதும் சரி எனக்கு தோனுது....நாட்ல இவ்ளோ பேர் பொது சேவை பண்றாங்க? எவ்ளோ பேர் மத்தவங்களுக்காக சேவை செய்றாங்க...ஆனா கஷ்டப்படற மக்கள் ஏன் இன்னும் கஷ்டபட்டுகிட்டே இருக்காங்க?

இது ஏன்னு யோசிக்கிறப்போ வந்த சில விஷயங்கள்

பொது நலத்துக்காக வாழணும்னு சொல்ற / செய்ற பலர் பல பெரிய விஷயங்கள செய்யும் பொது நிறைய சின்ன விஷயத்தை விடுறாங்க..அதாவது நான் நிறைய பேருக்கு படிகர்த்துக்கு உதவி பண்ணலாம்....பல விஷயங்களுக்காக ரோடுட்டுல இறங்கி போராடலாம் ஆனா வீட்ட விடு வெளிய போற போது விளக்க அணைக்காம போறது, இல்ல தெருல்ல குப்பை கொட்றது...இப்டி பல சின்ன விஷயங்கள்....இத எல்லாம் முதல ஒரு தனி மனிதன் மாத்திக்கலாமே?

இந்த மாதிரி நம்ம பண்ற எல்லா விஷயத்திலும் அடுத்தவங்கள பாதிக்காத மாதிரி இருந்தா அதுவே பொது நலத்துக்காக வாழற மாதிரி தானே?

இது தப்பா சரியானு எனக்கு தெரியாது...என் மனசுக்கு பட்டத சொல்றேன்....உங்க கருத்து என்ன?...கமெண்ட் பெட்டிய திறந்து வச்சி இருக்கேன் வந்து சொல்லுங்க மக்களே...

Friday, August 22, 2008

ஒலிம்பிக்கில் இந்தியா.

ஒலிம்பிக் 2008, இந்தியாவிற்கான பதக்க வாய்ப்புக்கள் almost முடிந்து விட்டது. இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் நமக்கு இது தான் most successful. ஒரு தங்க பதக்கம் மற்றும் இரு வெண்கல பதக்கங்களை வென்றுளோம். பதக்கம் வென்ற
1. அபினவ் பிந்த்ரா
2. சுஷில் குமார்
3. விஜேந்தர் குமார்
இந்த மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த most successful ஒலிம்பிக் வேலையில் நாம் சிந்திக்க சில விஷயங்கள்.
1. இதற்கு முந்தய ஒலிம்பிக் போட்டிகளில் வென்றவர்கள் அல்லது வெற்றிக்கு அருகே வந்தவர்கள் ஏன் பின்பு சோபிக்காமல் போனார்கள்?
1996 ல் பதக்கம் வென்ற பயஸ் மட்டுமே இதற்கு விதி விளக்கு, அவரும் கூட அடுத்து வந்த ஒலிம்பிக் போட்டிகளில் சாதிக்கவில்லை ஆனால் டென்னிஸ் grand slam போட்டிகளில் நிறைய சாதனை செய்தார். மற்றபடி கர்ணம் மல்லேஸ்வரி மற்றும் ரத்தோர் க்கு என்ன ஆனது?
மல்லேஸ்வரி சென்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று முதல் சுற்றில் வெளி ஏறினார், அதே நிலைமை தன் ரத்தோர் க்கும் இந்த ஒலிம்பிக் போட்டிகளில். ஏன் இந்த inconsistency?
இவர்கள் மட்டும் அல்ல, சென்ற முறை final வரை வந்த 4 x 400 meter relay team மற்றும் long jump அஞ்சு பாபி ஜார்ஜ் க்கு என்ன ஆயிற்று? இருவரும் இந்த தடவை முதல் சுற்றிலேயே வெளியேறினர். சென்ற போட்டிகளில் இருந்த இவர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு இன்னும் அல்லவா சிறப்பாக செய்து இருக்க வேண்டும்?
இந்தியாவில் விடை தெரியாத கேள்விகள் பல, அவற்றில் இதுவும் ஒன்றோ?
சரி சென்ற போட்டிகளை விடு விடுவோம் தற்போதைய ஒலிம்பிக்கில் சிறப்பாக செல்யல்பட்ட சிலர் அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் நன்றாக செயல் படுவார்கள் என நம்புவோமாக.
இதோ 2012 ஒலிம்பிக் போட்டிகளில் எனது நம்பிக்கை.
1. அபினவ் பிந்த்ரா
2. சுஷில் குமார்
3. விஜேந்தர் குமார்
மூவருமே தங்களது பதக்கங்களை தக்க வைத்து கொள்ளவேண்டும்.
மேலும்
1. Saina Neiwal (Badmiton)
2. சரத் கமல் (Table Tennis)
3. அகில் குமார் (Boxing)
மற்றும் இந்த போட்டிகளில் முதல் சுற்று மற்றும் கால் இறுதி போட்டிகளில் வெளி ஏறியவர்கள் அடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல் படுவார்கள் என நம்புவோமாக .

இது வரை அழகான பெண்கள் மட்டுமே வந்து கொண்டிருந்த எனது கனவுகளை தற்போது இவர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். 2012 ஆண்டில் இதற்கு விமோச்சனம் கிடைக்குமா?

Wednesday, August 20, 2008

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி. Vijeyndra Kumar boxing பந்தயத்தில் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இதில் அவர் தோல்வி அடைந்தாலும் வெண்கல பதக்கம் உறுதி.
அவர் தங்க பதக்கம் வெல்ல வாழ்த்துக்கள்.

ஓட்டை பக்கங்கள்

கேள்வி : இந்தியாவிற்காக சுஷில் குமார் பதக்கம் வென்று உள்ளாரே?

அவர் வென்றது பதக்கமே இல்லை. அவர் பிறந்து 8 மாதம் ஆகி இருக்கும் போது அவரை தூக்கிய அவர்கள் வீட்டு ஆயாவை காலால் நெஞ்சில் உதைத்து மல்யுத்தம் பழகி உள்ளார். இதையே இவர் தந்தை அல்லது தாயிடம் செய்து இருப்பாரா?
மேலும் அவருக்கு மூன்று வேலை சோறும் படுக்க இடமும் இருந்து உள்ளது. இப்படி பட்ட பணக்காரர் செய்ததா சாதனை. சாப்படிற்கே வழி இல்லாமல், பிச்சை எடுத்து உடம்பில் சத்தே இல்லாத ஒருவர் பதக்கம் வென்று இருந்தால் அது சாதனை.
மல்யுத்தம் என்பது என்ன ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளவது இது ஒரு விளையாட்டே அல்ல. விளையாட்டு என்பது புகழ் பெற்ற வார இதழில் யாரையாவது திட்டி கொண்டே இருக்க வேண்டும் அது தன் விளையாட்டு. இந்த விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க சிபாரிசு செய்யாத இந்திய அரசுக்கு இந்த வார சம்பட்டி அடி.
இது போல நல்ல பல பதிவை திரட்டும் தமிழ்மணத்திற்கு இந்த வார காதுல பூ.

Sunday, August 17, 2008

நான் எழுத நினைப்பதெல்லாம்....

இந்த பதிவு நான் எழுத ஆரம்பித்த பொது சர்ச்சைக்குரிய எந்த விஷயத்தயும் எழுத கூடாது என்று நினைத்தேன்...ஆனால் என் இரண்டாவது பதிவே இதை மீற வேண்டி இருக்கிறது :(...இதற்கான காரணம் நான் நேற்று ஒரு பிரபல வார இதழில் படித்த ஒரு கட்டுரை. அதை பல பேர் படிப்பதை கூட நான் விரும்பவில்லை, அதானல்தான் அந்த கட்டுரையின் வாசகங்களை கூட இங்கே கொடுக்க மனம் வரவில்லை.
அதில் அந்த பிரபல எழுத்தாளர் எழுதி இருபதின் சாராம்சம் 'அபினவ் பிந்த்ரா செய்து இருபது சாதனையே அல்ல'.
அதற்கான காரணம் -
1. அவர் ஒரு பணக்காரர்
2. அவர் பயிற்சி செய்த துப்பாக்கியின் விலை ரூ 30,000
3. அவர் ஏழு வயது சிறுவனாக இருந்த போது செய்ததாக சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி

அய்யா உங்களுக்கு சில கேள்விகள்...
1. அவர் பணக்காரர் என்பதால் நகை கடையிலா பதக்கம் வாங்கினார்?
2. விலை கம்மியாக இருக்கும் ஒரு international sporting equipment சொல்லுங்கள் பார்க்கலாம்?
3. அவர் ஏழு வயது சிறுவனாக இருந்த போது செய்ததாக சொல்லப்படும் அந்த நிகழ்ச்சிக்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? - இல்லது நீங்கள் சிறுவனாக இருந்தபோது செய்த செயல்களுக்கு இப்பொது பொறுப்பு ஏற்பிர்களா?

கடைசியாக ஒரு வார்த்தை...நல்லது நடக்க உதவ வேண்டாம்...உபத்திரவம் செய்யாதிர்கள்....

நோட்: தமிழ்மணத்தில்...இந்த வாரம் நிறைய கடிதங்கள் மற்றும் கண்டனங்கள் வருவதால் வேறு தலைப்பு கொடுத்துள்ளேன் :)

Friday, August 15, 2008

Photography....

Though I had started this account much before, havent posted any blogs till date.
Reason being I dont know what to write and I am not good at describing in English and bad in writing Tamil.
Thanks to PIT I am posting my first blog.
I had no idea of photography till my brother gifted me with a Canon S2IS. Its a good mixture of point and shoot and SLR. But I have never used it as it should be. Off late I started searching for some inputs on photography , that's when I landed in PIT. I wont say I have started taking good pictures after reading those blogs because I haven't taken any good pics as such but atleast now I will think for a moment before I click some picture.

I have added some of my recently shot photos here. Please provide your valuable comments.




www.flickr.com








Arun Nishore Baskaran's itemsGo to Arun Nishore Baskaran's photostream