Friday, June 12, 2009

கதைக்குள் கதை

நான் மது, மதுமிதா, ரொம்ப ஜாலியா வளர்ந்து, ஒரு நல்ல வேலையில் சேர்ந்து, கல்யாணம் செய்து கொண்டு கணவனின் அன்பு தொல்லையால் அந்த வேலையை விட்டு, சிறு, சிறு ஊடல்களுடன் அவனுடன் சைனாவில் இருக்கிறேன்.

'Inga Romba Bore, naan india vuku poren :@' என என் கணவனின் கூகிளில் பிங்க -- சற்ற்ற்ற்ற்ற்று நேரம் கழித்து,'I have send you a short story, atha padi' என ரிப்ளை செய்துவிட்டு offline ல போயிட்டான் பாவி.

இருங்க அப்படி என்ன தான் அவன் அனுப்பி இருக்கான்னு படிப்போம், எல்லாருக்கும் எழுதும்போது தான் spelling mistake வரும் எனக்கு படிக்கும் போதே வரும்...சின்ன பொன்னு தான? கொஞ்சம் பொறுத்துகோங்க.



' உனக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் கிடையாது' போனில் தனது தம்பி ஹரியிடம் வருத்தப்பட்டான் அமுதன்

'என்னடா பிரச்சனை' மறுமுனையில் ஹரி

'உங்க அம்மாவும் அப்பாவும் ஜாதகம் பார்த்து பொண்ண fix பண்றத்துக்குள்ள உனக்கு வயசாயிடும், இப்போ கூட ஒரு பொண்ணு ஜாதகம் வந்து இருக்கு, பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப interesteda இருக்காங்க, ஆனா அப்பா அம்மா தான் ஜாதகம் சரியில்லை வேண்டாம்னு சொல்றாங்க

'ம்ம்ம்' ஹரி

நான் சொல்றத கேளு, உன்னோடு படிச்ச, இல்ல இப்போ உன்னோட வேலை பாக்கற பொண்ண யாரையாவது உனக்கு புடிச்சு இருந்தா சொல்லு பேசாம உனக்கு அந்த பொண்ண பார்த்துடுவோம்

'சரி பார்க்கலாம் டா' என போனை வைத்தான் ஹரி.

பெண் பார்த்து, கல்யாணம் செய்வது எல்லாம் அப்பா, அம்மா, அண்ணன் வேலை என நினைத்த ஹரி சற்றே குழம்பி, அம்மாவிடம் பேசினான்

'என்னம்மா நடக்குது அங்க'

'அமுதன் போன் பண்ணினானா ?'

'ஆமா'

'நமக்கு தெரிஞ்ச பொண்ணா இருந்தா ஜாதகம் பார்க்காம கல்யாணம் பண்ணலாம், தெரியாத பொண்ணுக்கு என்ன செய்ய?'

'உனக்கு தெரிஞ்ச இல்ல பிடிச்ச பொண்ணா இருந்தா சொல்லு, ஜாதகம் பார்க்காம கல்யாணம் பண்ணலாம் என்று போனை வைத்தாள் அம்மா

உடனே அவனுக்கு தன்னுடன் வேலை பார்க்கும் அல்லது தன்னுடன் படித்த ஒரு பெண்ணின் ஞாபகம் வந்திருக்கும் என நீங்கள் எதிர்பார்த்தால் அது தவறு. அவன் படித்தது எல்லாம், ஆண்கள் பள்ளியிலும் கல்லூரியிலும் அவன் வேலை பார்க்கும் project ல் கூட ஒரே ஒரு பெண் தான் அதுவும் அவன் manager. ஆதலால் அவன் அம்மா மற்றும் அண்ணன் சொல்வதை யோசித்து கூட பார்க்கவில்லை.

இந்த சம்பவம் முடிந்து சரியாக ஒரு மாதம் முடிந்து ப்ரியா அவன் வாழ்க்கையில் வந்தாள். ப்ரியா அவனுடன் ஐந்தாம் வகுப்பு வரை படித்த பெண், 18 வருடங்களுக்கு பிறகு orkut ல் பார்த்தான். அந்த நட்பு மெதுவாக mail, chat என phone வரை வளர்ந்தது.

அன்று...

'Hiiii ப்ரியா'

'Hi ஹரி'

'ஹே வாய்ஸ் என்ன ட்ல்லா இருக்கு'

'வீட்ல ஹிம்சை தாங்க முடியல பா, எனக்கு ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணும்னா இந்த ஜென்மத்ல முடியாது பா'

'Same blood here, எங்க வீட்லயும் அதே பிரச்சனை தான்'

'ம்ம்ம்'

'பேசாம என்ன கல்யாணம் பண்ணிக்கரையா ?'

'என்ன இப்படி திடிர் னு கேட்கர'

'தோனுச்சு கேட்டேன்'

'இல்ல ஹரி, எங்க வீட்ல லவ் marriage னு சொன்னா ஒத்துக்க மாட்டாங்க'

'First of all let me make this clear, I am not saying "I Love you", I am saying that I would like to marry you'...திடிர் என ஆங்கிலத்துக்கு மாறினான் ஹரி

'அப்படினா...'

'தோ பார், முதல்ல உனக்கு இதுல ஒகே வா னு சொல்லு, then எங்க வீட்ல சொல்லி உங்க வீட்க்கு பேச சொல்றேன்...we will take this as arranged marriage itself'

'எங்க வீட்ல மாட்டேன் சொல்லிடாங்கனா'...

'சொல்லிடாங்கனா....ம்ம்ம்' மேலே பேச சற்று தயங்கினான்...

'சரி ஹரி நான், நாளைக்கு காலம்பர சொல்றேனே...எங்க வீட்ல எப்படி பேசனனும்னு'

ஹரி ஒரு நிமிடம் தரையிலிருந்து இரண்டு அடி மேலே சென்றான்...'பை ஹரி, நாளைக்கு கால் பன்றேன்'

'பை குட் நைட்'

ஹரி அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை...மறு நாள் வரப்போகும் அழைப்பிர்காக காத்து கொண்டிருந்தான்....

1...2....3...என நாட்கள் நகர்ந்தன ஆனால் அவளிடமிருந்து அழைப்பில்லை இவனது அழைப்பிர்க்கும் பதில் இல்லை...சரி நாம் தான் எதோ தவறு செய்துவிட்டோம் என நினைக்கும் தறுவாயில்...

'Hi ஹரி' என பிங் செய்தாள் ப்ரியா

'ட்ரிங்..ட்ரிங்...ட்ரிங்...'
சே கதை intresting a போகும் போது தான் யாராவது வந்து டிஸ்டர்ப் பன்னுவாங்க - இருங்க யார் வந்து இருக்காங்க பார்த்துட்டு வந்து கதைய continue பன்னுவோம்...

'மது...நான் சொல்லிருக்கேன் ல என் friend ப்ரியா னு...அவ இங்க சைனா ல தான் இருக்கா...அதுவும் பக்கதுல 10 mins drive ல தான் இருக்கா நாம போய் பார்த்துட்டு வரலாமா?'

சரிங்க என் கனவர் ஹரி வந்துட்டார்...இனிமே எனக்கு இந்த கதை தேவை இல்ல...bye.