Saturday, September 6, 2008

என்னை வாழ வைத்த தெய்வங்கள்

நேற்று ஆசிரியர் தினம்...நேற்றே இந்த பதிவை இட வேண்டும் என எண்ணி இருந்தேன்.
ஆனா ஆபீஸ் ஆணி புடுங்கற வேலை ஜாஸ்தி ஆயிடிச்சு, நெருப்பு நறிய (Firefox a எல்லாரும் இப்டி தான் எழுதறாங்க) தொறக்க முடியாம போயிடிச்சு.

என்ன கட்டி மேய்த்த எல்லா ஆசிரியரும் தெய்வங்கள் தான், ஆனா அதுல ஒரு 3 பேர் மட்டும் ஸ்பெஷல் - அவங்களுக்காக அவங்கள பத்தின பதிவு இது.

Hema Miss : நான் வாழ்க்கையில் மறக்க முடியாத, மறக்க கூடாத ஒரு ஆத்மா. எனக்கு L.K.G முதல் டியூஷன் எடுத்தவங்க (நான் அவ்ளோ வாலு, என்ன வீட்ல வச்சி இருக்க முடியாம அப்பா L.K.G க்கே டியூஷன் அனுப்பிட்டாங்க). என்ன ஒரு ஸ்டுடென்ட் போல பார்காம ஒரு குழந்தை மாதிரி தான் ட்ரீட் பண்ணுவாங்க. இவங்க கிட்ட டியூஷன் போறது எதோ எனக்கு சொந்தகாரங்க வீட்டுக்கு போற மாதிரி இருக்கும், ஆனா டியூஷன் முடிச்சிட்டு வெளியல வரும் பொது தேவையானது எல்லாம் படிச்சிட்டு ஹோம் வொர்க் முடிச்சிட்டு வந்து இருப்பேன். 7 வருஷம் இவங்க கிட்ட டியூஷன் படிச்ச காலத்துல்ல எனக்கு வீட்டுக்கு வந்து படிக்க வேண்டிய கட்டாயமே கிடையாது. ஆனா இதுவே எனக்கு பின்னாடி ஒரு பிரச்சனையா போச்சு. வீட்டுக்கு வந்தா படிக்கவே மாட்டேன். இவங்களுக்கு திருமணம் ஆகி வெளியூர் போன பிறகு எனக்கு வேற நல்ல டியூஷன் டீச்சர் கிடைக்காம ரெண்டு வருஷம் ரொம்ப கஷ்ட பட்டேன். அப்புறம் வேற ஒரு ஸ்கூல் மாறின பிறகு தான் கொஞ்சம் மீண்டு வந்தேன்.
எல்லாருக்கும் தாய் தான் முதல் ஆசிரியர் னு சொல்ல்வங்க, எனக்கு முதல் ஆசிரியர் தாய் போல அமைந்தது என் பாக்கியம்.

ஒரு வழியா வேற ஸ்கூல் மாறி, திருப்பி கொஞ்சம் நல்ல படிக்க ஆரம்பிச்சேன். புது ஸ்கூல் ரொம்ப நல்ல இருந்துச்சு, எங்க அப்பா படிச்ச ஸ்கூலும் இது தான். அங்க இருந்த பாதி டீச்சர்ஸ் அப்பா கூட படிச்சவங்க இல்ல அப்பா க்கு கிளாஸ் எடுத்தவங்க அதனால அங்க நான் செல்ல பிள்ளை.

அங்க 11th படிக்கும் போது எனக்கு கணக்கு பாடம் எடுத்த ஜெயசீதா maam தான் என் இரண்டாவது தெய்வம். ஆசிரியர் வேலையை தொழிலாக செய்யாமல் ஒரு சேவையாக இன்றைக்கும் செய்து வருபவர். Integration and Differentiation இவங்கள மாதிரி சொல்லி தருவதற்கு ஆள் இல்ல. அதை தவிர இவங்க கிட்ட எனக்கு பிடிச்சது ஸ்டுடென்ட்ஸ் மேல இவங்க காட்டும் அக்கறை. எக்ஸாம் டைம் போது இவங்க வீட்லயே தங்கி படிக்கற ஸ்டுடென்ட்ஸ் கூட இருகாங்க. நான் இவரிடம் 11th and 12th Maths டியூஷன் போனேன், ஆனால் அவங்க இதுக்காக என்கிட்ட 1 ரூபாய் கூட பீஸ் வாங்கல. இதுக்கு அவங்க சொன்ன காரணம் - 'நீ Naturala 160 marks எடுக்க வேண்டிய பையன், உன்ன நான் 190+ எடுக்க வச்சா தானே நான் உனக்கு டியூஷன் சொல்லி கொடுத்தேன் னு அர்த்தம், +12 public exam 190+ marks எடு, நான் உங்க வீட்டு வாசல்ல ஈட்டி காரி மாதிரி வந்து பீஸ் வாங்கறேன்'.
இத அவங்க சொன்னது 11th exam முடிந்த பிறகு. ஆனா நான் +12 Maths எடுத்த marks 155.
அதனால marks வந்த பிறகு நான் அவங்கள போய் பார்க்க கூட இல்ல. ஒரு வழியா B.Sc முடிச்சிட்டு ஒரு நல்ல university la PG கிடைச்ச பிறகு தான் அவங்கள பார்க்க போனேன், அப்போ அவங்க 'நீ இந்த university ஸீட் வாங்கினது பத்தாது, You deserve more for your talent' னு ஊக்க படுத்தினாங்க. இதற்க்கு பிறகு ஒரு நல்ல வேலை கிடைத்த பிறகு அவங்களை போய் பார்த்தேன் அப்போ அவங்க சொன்ன வார்த்தை 'இப்போ தான் I am relived. Now you know how to utilize your talent. இத நீ உன் லைப் எல்லா இடத்திலும் அப்ளை பண்ணு You will be more successful' னு வாழ்த்தி அனுப்பினாங்க. ஆனா இன்னிக்கு வரைக்கும் அவங்களுக்கு அந்த 11th, 12th டியூஷன் பீஸ் கொடுக்கல, ஏன்னா அதை இனிமே பணமா கொடுப்பதில் அர்த்தம் இல்லைனு எனக்கு தெரியும்.

எல்லாருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

6 comments:

ஆயில்யன் said...

//அங்க 11th படிக்கும் போது எனக்கு கணக்கு பாடம் எடுத்த ஜெயசீதா maam தான் என் இரண்டாவது தெய்வம்//


பிரதர் நீங்க எந்த ஊரு???
மயிலாடுதுறையா????

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

//பிரதர் நீங்க எந்த ஊரு???
மயிலாடுதுறையா????
//
ஆமாம் பிரதர், நானும் மயிலாடுதுறை தான்,
பிறந்தது, படித்தது எல்லாம் அங்க தான்...அப்பா, அம்மா இப்போ கூட அங்க தான் இருகாங்க

ஆயில்யன் said...

// 'இப்போ தான் I am relived. Now you how to utilize your talent. இத நீ உன் லைப் ல எல்லா இடத்திலும் அப்ளை பண்ணு You will be more successful' //

மிக மிக அருமையான வரிகள்!

ஆயில்யன் said...

//அருண் நிஷோர் பாஸ்கரன் said...
//பிரதர் நீங்க எந்த ஊரு???
மயிலாடுதுறையா????
//
ஆமாம் பிரதர், நானும் மயிலாடுதுறை தான்,
பிறந்தது, படித்தது எல்லாம் அங்க தான்...அப்பா, அம்மா இப்போ கூட அங்க தான் இருகாங்க

September 6, 2008 8:01 AM//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

(ஆனந்த கண்ணீரு!)

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

//
ஆயில்யன் said...
//அருண் நிஷோர் பாஸ்கரன் said...
//பிரதர் நீங்க எந்த ஊரு???
மயிலாடுதுறையா????
//
ஆமாம் பிரதர், நானும் மயிலாடுதுறை தான்,
பிறந்தது, படித்தது எல்லாம் அங்க தான்...அப்பா, அம்மா இப்போ கூட அங்க தான் இருகாங்க

September 6, 2008 8:01 AM//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

(ஆனந்த கண்ணீரு!)
//
Same blood here :)

Unknown said...

பதிவு அருமை..!! :)) ஆயில்யன் அண்ணாவுக்கு புது நண்பர் கிடைச்சதுல சந்தோசம்..!! :)))))