நண்பர் sri காபி போட்ட அனுபவங்களை பற்றி ஒரு பதிவு போட்டு இருகாங்க. அவங்க மாதிரி காபி போட முடியாதுனாலும் அதே மாதிரி ஒரு பதிவு போட முயற்சி பண்றேன் :)
இந்த சரித்திர புகழ் பெற்ற நிகழ்ச்சி நடந்தது என் நண்பன் விடுதலை (அவன் பேர் அதாங்க !!!) வீட்ல. விடுதலையும் , சௌந்தரும் படம் வரையர்த்துக்கு நான் தார்மிக அதரவு கொடுத்துகிட்டு இருந்தேன். அப்ப வெளில கிளம்பின விடுதலை அம்மா 'பசங்களா அடுப்புல பால் காச்சி மூடி வச்சி இருக்கேன் வேணும்கறப்ப காபி போட்டு சாபிடுங்கனு' சொல்லிட்டு போய்டாங்க.
அதுவரைக்கும் படம் வரையறதுல டீப் திங்கிங் ல இருந்த விடுதலை 'இருங்கடா நான் போய் உங்களுக்கு காபி போட்டு தரேன் னு கிளம்பினான்'. ஆனா அந்த 'உங்களுக்கு' னு அவன் சொன்னதுல இருந்த உள்குத்த அப்ப எங்களால புரிஞ்சிக்க முடியல.
இப்டி Kitchen குள்ள போனவன் ஒரு அரை மணி நேரம் கழிச்சி வந்து..
.'டேய் ஒரு சின்ன பிரச்சனை டா...காபி ஏன்னு தெரியல கரையவே மாட்டேங்குது'
'இரு நான் வரேன்'
kictchen குள்ள போனா, பிரவுன் கலர்ல ஒரு திரவம் அடுபுள்ள கொதிச்சிகிட்டு இருக்கு.
'டேய் அதன் காபி ரெடி ஆயிடிச்சுல்ல இதுல்ல என்ன டா பிரச்சனை' இது நான்.
'டேய் வெண்ணை, காபி போடி அதுலேயே இருக்கு கரைய மாட்டேங்குது'
'பூஸ்ட், ஹார்லிக்க்ஸ் தான் பால்ல கரையும். டீ, காபி கரையாது...நாம தான் வடிகட்டணும்...போய் filter எடுத்துக்கிட்டு வா'...
ஒரு வழியா அத வடிகட்டி நாங்க குடிச்சி முடிச்சோம்....இந்த காபி சூப்பர் னு வேற சொன்னான் சௌந்தர் !!!!.
பி.கு : நாங்க பால்ல கலந்தது ப்ரூ இல்ல பில்டர் காபி பொடி னு, இந்த சம்பவம் நடந்து 6 வருஷம் கழிச்சி இப்ப ஜப்பான் ல இருக்கும் போது தெரிஞ்சுகிட்டேன் :)
எல்லாருக்கும் Happy Weekend !!!!
Friday, September 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
:):):)
நான் டீ போடக் கத்துகிட்ட கதைய விட (சமையற்கலை ஓர் ஆய்வியல் அணுகுமுறை) மோசமா இருக்கே இது.. ரசித்தேன் ஏ&பி :)
//
rapp said...
:):):)
//
வருகைக்கு நன்றி rapp.
//
காயத்ரி said...
நான் டீ போடக் கத்துகிட்ட கதைய விட (சமையற்கலை ஓர் ஆய்வியல் அணுகுமுறை) மோசமா இருக்கே இது.. ரசித்தேன் ஏ&பி :)
//
நளபாகம் னு சும்மாவா சொல்றாங்க...:)
வருகைக்கு நன்றி காயத்ரி...
'டேய் வெண்ணை, காபி போடி அதுலேயே இருக்கு கரைய மாட்டேங்குது'// மிக ரசித்தேன்.
//ஒரு வழியா அத வடிகட்டி நாங்க குடிச்சி முடிச்சோம்....இந்த காபி சூப்பர் னு வேற சொன்னான் ///
இந்த ஊருக்கு வந்த புதிதில் காபி பில்டர் கிடைக்காமல் நானும் இப்படித்தான் காபி போட்டு குடிச்சுட்டு வந்தேன்!
(இப்ப நல்லா ஜம்முன்னு பில்டர்ல டபுள் ஸ்ட்ராங்க காபி அடிச்சு தள்ளிக்கிட்டிருக்கேனாக்கும்!)
ஓ இது ப்ரு
இல்லை............பில்டர் காபியா?
hahahaha....
அன்புடன் அருணா
வருகைக்கு நன்றி தாமிரா
ஆயில்யன் நான் பில்டர் காப்பியை மறந்து 8 மாசம் ஆச்சு :(
//
Aruna said...
ஓ இது ப்ரு
இல்லை............பில்டர் காபியா?
hahahaha....
//
அருணா இது ப்ரூ முறையில் போடபட்ட பில்டர் காபி :)
ஹா...ஹா...
//ஒரு வழியா அத வடிகட்டி நாங்க குடிச்சி முடிச்சோம்....//
நீங்களும் குடிச்சீங்களா என்னா
//நாங்க பால்ல கலந்தது ப்ரூ இல்ல பில்டர் காபி பொடி னு, இந்த சம்பவம் நடந்து 6 வருஷம் கழிச்சி இப்ப ஜப்பான் ல இருக்கும் போது தெரிஞ்சுகிட்டேன் //
இது டாப்பு...
// வெண்பூ said...
ஹா...ஹா...
//ஒரு வழியா அத வடிகட்டி நாங்க குடிச்சி முடிச்சோம்....//
நீங்களும் குடிச்சீங்களா என்னா
//
வாங்க வெண்பூ,
குடிக்காம என்ன செய்றது...நான் பில்டர் பண்ணின காபி ஆச்சே :) . அப்போ குடிக்கும் போது அது நல்லா தான் இருந்துச்சு :)
ஹா.. ஹா.. ஹா..
ஆகா இதை படித்தவுடன், நானெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை என நினைக்க வைத்துவிட்டீர்களே! :P
சமையல்ல என்னை விட பெரிய ஆளா இருப்பீங்க போல இருக்கே..!! ;))
Post a Comment