Saturday, August 30, 2008

பொது நலத்திற்காக வாழ்தல்...

நண்பர் சர்வேசன் பொது நலத்திற்காக வாழ்ரத பத்தி ஒரு பத்தி ஒரு பதிவு போட்டு இருக்கார். அவர் பதிவ படிச்ச போதும் அத தவிர மத்த பொது சேவை நிகழ்ச்சி, செய்திகள் பார்க்கும் போதும் சரி எனக்கு தோனுது....நாட்ல இவ்ளோ பேர் பொது சேவை பண்றாங்க? எவ்ளோ பேர் மத்தவங்களுக்காக சேவை செய்றாங்க...ஆனா கஷ்டப்படற மக்கள் ஏன் இன்னும் கஷ்டபட்டுகிட்டே இருக்காங்க?

இது ஏன்னு யோசிக்கிறப்போ வந்த சில விஷயங்கள்

பொது நலத்துக்காக வாழணும்னு சொல்ற / செய்ற பலர் பல பெரிய விஷயங்கள செய்யும் பொது நிறைய சின்ன விஷயத்தை விடுறாங்க..அதாவது நான் நிறைய பேருக்கு படிகர்த்துக்கு உதவி பண்ணலாம்....பல விஷயங்களுக்காக ரோடுட்டுல இறங்கி போராடலாம் ஆனா வீட்ட விடு வெளிய போற போது விளக்க அணைக்காம போறது, இல்ல தெருல்ல குப்பை கொட்றது...இப்டி பல சின்ன விஷயங்கள்....இத எல்லாம் முதல ஒரு தனி மனிதன் மாத்திக்கலாமே?

இந்த மாதிரி நம்ம பண்ற எல்லா விஷயத்திலும் அடுத்தவங்கள பாதிக்காத மாதிரி இருந்தா அதுவே பொது நலத்துக்காக வாழற மாதிரி தானே?

இது தப்பா சரியானு எனக்கு தெரியாது...என் மனசுக்கு பட்டத சொல்றேன்....உங்க கருத்து என்ன?...கமெண்ட் பெட்டிய திறந்து வச்சி இருக்கேன் வந்து சொல்லுங்க மக்களே...

8 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) கொஞ்சம் உண்மை மாதிரியே இருக்கு.. அப்படி யாருக்கு ம் தொந்திரவு செய்யாம வாழமுடிஞ்சா.. நல்லாதான் இருக்கும்..

SurveySan said...

மொத வரீல என் பேரப் பாத்ததும், ஆகா ஏதோ திட்டிருக்கீங்க பாத்துட்டுப் போலாம்னு வந்தேன் :)

///இந்த மாதிரி நம்ம பண்ற எல்லா விஷயத்திலும் அடுத்தவங்கள பாதிக்காத மாதிரி இருந்தா அதுவே பொது நலத்துக்காக வாழற மாதிரி தானே?
///

ஆமான்னும் சொல்லலாம் இல்லைன்னும் சொல்லலாம்.
அடுத்தவங்களை, 'நல்லவிதமா' பாதிக்கக் கத்துக்கணும் எல்லாரும்.


பி.கு: புச்சா நீங்க? இன்னும் கொஞ்சம் 'சுவை' கூட்டி எழுத முயற்சி பண்ணுங்க. எப்படின்னு கேக்காதீங்க? எனக்கும் தெரியாது. படிச்சா ஏதாவது ஒரு சுவாரஸ்யம் கிடைக்கணும் படிக்கரவங்களுக்கு. கொஞ்சம் ட்ரைனஸ் இருக்கு, பாத்துக்கங்க. :)

Unknown said...

பதிவு சின்னதா இருந்தாலும், இதில அழகான, ஆழமான கருத்து இருக்கு. தமிழ் நாட்டுக்கு கமல் மூலமா பெரும்பான்மை மக்களுக்கு அறிமுகமான, chous தத்துவம் கூட இதுக்கு ஒத்து வரும். சின்ன சின்னதா, ஒரு ஒருத்தரா சில நல்ல விஷயங்கல செய்யும் போது, அது ஒரு பெரிய நன்மையை உண்டாக்கும். "சிறு துளி, பெறு வெள்ளம்"-னு அழகா தமிழ்ல சொன்னா யாருங்க கேக்குரா... நம்ம ஆளுங்களுக்கு, புதுசா, glamor-ஆ ஏதாவது சொன்னாதான் கவனிக்கராங்க...!!! அதான், chous-அயும், கமலயும் இழுத்தேன்.

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

ஆபீஸ் ல்...ஆணி பிடுங்கும் வேலை கொஞ்சம் அதிகமாக இருந்ததால்...கமெண்ட் க்கு reply செய்ய முடியவில்லை...T.V (தாமதத்திற்கு வருந்துகிறேன்) :)

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

வாங்க முத்துலட்சுமி,
// அப்படி யாருக்கு ம் தொந்திரவு செய்யாம வாழமுடிஞ்சா.. நல்லாதான் இருக்கும்..
//
முடியும் னு நினைச்சா கண்டிப்பா முடியும்

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

வாங்க surveysan,
// மொத வரீல என் பேரப் பாத்ததும், ஆகா ஏதோ திட்டிருக்கீங்க பாத்துட்டுப் போலாம்னு வந்தேன் :)
//
உங்கள போய் திட்டுவேனா?...நான் பதிவு எழுத வந்ததே உங்களை பார்த்து தானே :)

//
ஆமான்னும் சொல்லலாம் இல்லைன்னும் சொல்லலாம்.
அடுத்தவங்களை, 'நல்லவிதமா' பாதிக்கக் கத்துக்கணும் எல்லாரும்.
//

நல்லவிதமா பாதிக்க முடியும் னா சரி தான். ஆனா குறைந்த பட்சம் அடுத்தவங்கள disturb பண்ண கூடாது இல்லியா?

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

//
SurveySan said...
பி.கு: புச்சா நீங்க? இன்னும் கொஞ்சம் 'சுவை' கூட்டி எழுத முயற்சி பண்ணுங்க. எப்படின்னு கேக்காதீங்க? எனக்கும் தெரியாது. படிச்சா ஏதாவது ஒரு சுவாரஸ்யம் கிடைக்கணும் படிக்கரவங்களுக்கு. கொஞ்சம் ட்ரைனஸ் இருக்கு, பாத்துக்கங்க. :)
//
பதிவு எழுதறதுக்கு நான் புதுசு தான். ஆனா நிறைய பதிவு படிக்கிறேன்...உங்க பதிவுல, டோண்டு ராகவன் பதிவுல, இப்டி நிறைய பேர் பதிவுல அருண் னு கமெண்ட் போட்டு இருக்கேன். நிச்சியமா அடுத்த பதிவுகள் ல சுவை கூட்டி எழுத முயற்சி பண்றேன்.

அருண் நிஷோர் பாஸ்கரன் said...

//
நளன் said...

பதிவு சின்னதா இருந்தாலும், இதில அழகான, ஆழமான கருத்து இருக்கு.

//

பாராட்டுகளுக்கு நன்றி நளன்...

//
நம்ம ஆளுங்களுக்கு, புதுசா, glamor-ஆ ஏதாவது சொன்னாதான் கவனிக்கராங்க...!!!
//

100% உன்ன்மை....