இந்த பதிவு நான் எழுத ஆரம்பித்த பொது சர்ச்சைக்குரிய எந்த விஷயத்தயும் எழுத கூடாது என்று நினைத்தேன்...ஆனால் என் இரண்டாவது பதிவே இதை மீற வேண்டி இருக்கிறது :(...இதற்கான காரணம் நான் நேற்று ஒரு பிரபல வார இதழில் படித்த ஒரு கட்டுரை. அதை பல பேர் படிப்பதை கூட நான் விரும்பவில்லை, அதானல்தான் அந்த கட்டுரையின் வாசகங்களை கூட இங்கே கொடுக்க மனம் வரவில்லை.
அதில் அந்த பிரபல எழுத்தாளர் எழுதி இருபதின் சாராம்சம் 'அபினவ் பிந்த்ரா செய்து இருபது சாதனையே அல்ல'.
அதற்கான காரணம் -
1. அவர் ஒரு பணக்காரர்
2. அவர் பயிற்சி செய்த துப்பாக்கியின் விலை ரூ 30,000
3. அவர் ஏழு வயது சிறுவனாக இருந்த போது செய்ததாக சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி
அய்யா உங்களுக்கு சில கேள்விகள்...
1. அவர் பணக்காரர் என்பதால் நகை கடையிலா பதக்கம் வாங்கினார்?
2. விலை கம்மியாக இருக்கும் ஒரு international sporting equipment சொல்லுங்கள் பார்க்கலாம்?
3. அவர் ஏழு வயது சிறுவனாக இருந்த போது செய்ததாக சொல்லப்படும் அந்த நிகழ்ச்சிக்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? - இல்லது நீங்கள் சிறுவனாக இருந்தபோது செய்த செயல்களுக்கு இப்பொது பொறுப்பு ஏற்பிர்களா?
கடைசியாக ஒரு வார்த்தை...நல்லது நடக்க உதவ வேண்டாம்...உபத்திரவம் செய்யாதிர்கள்....
நோட்: தமிழ்மணத்தில்...இந்த வாரம் நிறைய கடிதங்கள் மற்றும் கண்டனங்கள் வருவதால் வேறு தலைப்பு கொடுத்துள்ளேன் :)
Sunday, August 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருண் நானும் நீங்கள் கூறியதையே என் பதிவிலும் பிரதிபலித்துள்ளேன்.
நீங்கள் கூறியது "நீங்கள் சிறுவனாக இருந்தபோது செய்த செயல்களுக்கு இப்பொது பொறுப்பு ஏற்பிர்களா?" சரியான கேள்வி.
அபினவ் சிறு வயதில் செய்ததை தற்போது கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. அபினவ் செய்ததை நியாயப்படுத்தவில்லை ஆனால் அந்த தவறை ஒலிம்பிக் ல் தங்கம் பெற்ற நேரத்திலா கூறுவது. ஏதாவது கூற வேண்டும் என்று இதை போல தேடி பிடித்து கூறினால் ஆத்திரமே வருகிறது.
//விலை கம்மியாக இருக்கும் ஒரு international sporting equipment சொல்லுங்கள் பார்க்கலாம்?//
இதை வசதி குறைந்தவர்கள் வாங்க முடியாது என்ற அர்த்தத்தில் கூறி உள்ளார், உண்மைதான் ஆனால் அதற்க்கு இவர்கள் என்ன செய்வார்கள். இதை கூட சரி என்று ஒத்துக்கொள்ளலாம் சம்பந்தமே இல்லாமல் அவர் மகனுக்கு ஹோட்டல் கொடுப்பதை எல்லாம் கூறி உள்ளார். அதற்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை.
இவ்வாறு வித்யாசமாக கூறுவதையே தங்கள் சிறப்பாக பலர் நினைத்து கொண்டுள்ளார்கள்.
நல்ல பதிவு அருண்.
நன்றி கிரி. அவர் எதை மனதில் வைத்து எழுதினர் என்பதற்குள் நான் போக விரும்பவில்லை.
அதனால் தான் அவர் பெயரை கூட போடாமல் எழுதி இருக்கும் கருத்தை பற்றி மற்றும் எழுதினேன்.
Post a Comment