இந்த விழயத்தை பற்றி நிறைய எழுதப்பட்டுவிட்டது. அருந்ததி ராய் முதல் பல அறிவுஜீவிகள் வரை இந்த போராட்டத்திற்கு ஜாதி மத அடையாளங்கள் அளித்து சமாதி கட்ட முயன்றனர்.
இவர்கள் எல்லோரும் வைக்கும் ஒரு பொதுவான கேள்வி "இந்த சட்டம் வந்தால் ஊழல் முற்றாக ஒஜிந்துவிடுமா?" என்பதுதான்.
இந்த கேள்வியே இந்திய ஊழல்களில் ஊற்றுக்கண் என்பது என் கருத்து. நமக்கு எல்லாமே சுலபமாக வேண்டும். ஒரே நாளில், ஒரே நிமிடத்தில், ஒரு சட்டத்தில் எல்லாம் நடக்க வேண்டும். அப்டடி நடக்கவில்லை என்றால் அதற்கு தேவையான குறுக்கு வழிகள் எல்லாம் கண்டுபிடிக்கப்படும். எந்த ஒரு காரியத்தையும் செய்துமுடிக்க தேவைப்படும் உழைப்பும் நேர்மையும் நம்மிடம் கிடையாது. நாம் எதிர்பார்ப்பது எல்லாம் ஒரு இந்தியன் தாத்தாவையம், முதல்வன் அர்ஜுனையும் தான்.
இந்த பின்னணியை வைத்து பார்க்கும் பொழுதுதான் இந்த போராட்டம் மிகவும் முக்கியமானதாக தெரிகிறது. என்னை பொருத்தவரை கண்டிப்பாக இந்த சட்டம் ஊழலை ஒழிக்கும் ஒரு மந்திர கோல் அல்ல, இது ஒரு தொடக்கம் மடும்மே, ஒரு பலமான அடித்தளம். இந்த போராட்டத்தின் வெற்றி என்பது லோக்பால் மசோதா அல்ல. இந்த நாட்டின் மக்களை ஊழல்க்கு எதிராக திரட்டி ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மூலமாகவே அதற்க்கு எதிராக ஒரு சட்டத்தை கொண்டுவர செய்தது.
இதை பற்றி இந்திய ஊடங்களில் வரும் செய்தி ஒன்று முற்றிலும் வெறுப்பு மற்றும் அவநம்பிக்கையை ஊட்வதாக இருக்கிறது...இல்லையென்றால் மிகை உணர்ச்சியால் புகழ் பாடுவதாக இருக்கிறது(Anna is India போன்றவை). நான் மிகவும் மதிக்கும் துக்ளக் சோ கூட இதை கேவலமான முறையில் விமர்சனம் செய்வது சற்று வருத்தமடைய செய்கிறது.
நான் படித்த வரையில் இதை பற்றி மிக சிறப்பாக எழுதுவது எழுத்தாளர் ஜெயமோகன் மட்டுமே. இதை பற்றிய அவரது கட்டுரையின் தொகுப்பு இங்கே.
Saturday, August 27, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment